யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பரத்திருவிழாவும், மறுநாள் 16ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 17ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும், இடம் பெறவுள்ளன.

மேலும் திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்களின் நலன் கருதி, சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேசசபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலிஸாரும், மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினரும் , யாழ் . மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கமும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *