ஐ.நா. விவகாரத்தை கையாள இலங்கையின் உயர்மட்ட குழு ஜெனீவாவிற்கு விஜயம்: மார்ச் 2 இல் பச்லெட்டுடன் சந்திப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை விவகாரத்தை முன்வைக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஜெனீவாவிற்கு சென்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் நேற்று ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதேவேளை வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இன்று விஜயம் செய்யவுள்ளனர்.

குறித்த தூதுக்குழுவினர் மார்ச் 2 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டை சந்திக்கவுள்ளனர்.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளும் நடைபெறவுள்ளன.

Leave a Reply