158 வது பொலிஸ் தினம் யாழில் கடைப்பிடிப்பு!

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 158 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்தவகையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலும் 158வது பொலிஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்போது, ஆரிய குளத்தில் அமைந்துள்ள நாக விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. பின்னர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு ஆரியகுளத்தடியில் இடம்பெற்றது. அத்துடன் வீதியில் சென்ற பயணிகளுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் என்பன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் – காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் – லூசன் சூரிய பண்டார, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் – ஜருள், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – சமிலி பலியேன, பிராந்திய போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க, யாழ்ப்பாணம் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி – சுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *