ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம்(04) இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.