மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை கிலன்டில் தோட்ட பெரிய நாடு தோட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் சட்டவிரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த உபகரணங்கள் அனைத்தும் மீட்டனர்.
கைது செய்யப்பட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் 11ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.