அதிசொகுசு பஸ் – லொறியுடன் மோதி விபத்து: 5 பேர் படுகாயம்

தம்புள்ள, பெப்.26

திருகோணமலை கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொயொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply