திங்கட்கிழமை முதல் மின்வெட்டு தீவிரமடையவுள்ளதா?

திங்கட்கிழமை முதல் மின்வெட்டு தீவிரமடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவில் மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது மின்சார நெருக்கடியல்ல.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி என தெரிவித்துள்ளார்.

தனியார் மின் உற்பத்தியாளர்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கொழும்பு நகர எல்லை முழுவதும் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரம் துண்டிக்கப்படுமானால், எரிபொருளைப் பெறுவதில் கொழும்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply