புத்தளம் , கற்பிட்டி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விஜய கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இஙந்திர படகு ஒன்றினை பரிசோதனை செய்துள்ளனர்.
குறித்த டிங்கி இயந்திர படகில் 22 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 700 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட 700 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திர படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.