தெஹிவளை- கடவத்தை வீதியில் இன்று(20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.