அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.