லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதனால் 558 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், லெபனானில் தற்போது பெரும் பதற்றமானதொரு சூழல் நீடித்து வரும் நிலையில், அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கிணங்க, முதலாவது செயலாளரான சனத் பாலசூரியவைத் தொடர்புக் கொள்ள 009 617 038 6754 என்ற தொலைப்பேசி இலக்கத்தையும்,
மூன்றாவது செயலாளரான பிரியங்கனி திஸாநாயக்கவை தொடர்புக் கொள்ள 009 618 154 9162 என்ற தொலைப்பேசி இலக்கத்தையும் தூதரகம் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், மொழிபெயர்ப்பாளருக்கான தொலைப் பேசி இலக்கமாக 009 618 136 3894 எனும் இலக்கமும் லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.