காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதான வீதியில் நேற்று(24) மாலை லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காத்தான்குடி அப்றார் நகர் வீதியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி நெடுஞ்சாலை வீதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த போதே கல்லடி பகுதியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் போது உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.