ஜனாதிபதித் தேர்தலை போன்று பொதுத் தேர்தலையும் அமைதியாக நடத்துவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மற்ற ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டும், ஜனாதிபதித் தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் எந்தவொரு குற்றச் செயல்களும் பதிவாகவில்லை.
பொதுத் தேர்தலும் அவ்வாறே நடத்தப்படும் என நம்புவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட அரசியல் கருத்தைக் கொண்ட புதிய ஜனாதிபதியின் கீழ் நடைபெறும் பொதுத் தேர்தல் என்பதால், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யாமல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என பெப்ரல் அமைப்பு நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.