ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.