உக்ரைனில் போருக்கு மத்தியில் ரயிலில் பிறந்த குழந்தை

உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

உக்ரைன் தலைநகர் கீவ்-ல் தாக்குதலுக்கு அஞ்சி, பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, 23 வயதுபெண் ஒருவருக்கு அங்கேயே குழந்தை பிறந்தது தெரியவந்தது.

உடனடியாக பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்த பொலிஸார், அவரையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Leave a Reply