வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்- ஓ.எல் பரீட்சையில் 9A பெற்ற முல்லை மாணவி கருத்து..!

வைத்தியராகி நாட்டுமக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும்  A தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்திருந்தார். 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  கிராமத்தை சேர்ந்த குறித்த மாணவி ஒரே நேரத்தில்  க.பொ.த சாதாரண பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றதோடு, தைக்வொண்டோ (Taekwondo)  விளையாட்டிலும்  பதக்கத்தினை பெற்று  இரணைப்பாலை கிராமத்திற்கும்  பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
படிப்பிற்கு விளையாட்டு  ஒரு தடையல்ல என்பதையும் ,  சம நேரத்தில் இரண்டுக்கும் கொடுக்கும்  முக்கியத்துவத்தில்  சாதனை படைக்கலாம்  எனவும், அதற்கு தான் ஒரு எடுத்துக்காட்டு எனவும், தனது வெற்றிக்கு  துணைநின்ற பயிற்றுவிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
அத்தோடு குறித்த மாணவி  வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், அதனையும் அடைவேன் எனவும்  கூறியிருந்தார். 
குறித்த  மாணவியின் தந்தை  இது தொடர்பாக கூறும்போது,
விளையாட்டில் ஆர்வம் காட்டும் நேரம் பயமாகவே இருந்தது. படிப்பு  பின்தங்கிவிடுமோ என  ஆனால்  ஒரே நேரம் எனது மகள்  விளையாட்டிலும் , படிப்பிலும்  சாதனை படைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது.
அத்தோடு எனது மகளின்  எதிர்கால இலக்கினை  அடைய  எனது முழு ஆதரவு  இருக்கும் என கூறியிருந்தார்.
கடந்த 28,29,30/09/2024 திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதுபிரிவில்  59-63 கிலோ எடைப்பிரிவில்  குறித்த மாணவி  வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *