தந்தையின் மரணத்தில் சந்தேகம்: உடற்கூற்று பரிசோதனையில் காரணம் வெளியீடு

யாழ்ப்பாணம், பெப்.27

தனது தந்தையின் மரணம் தொடர்பில் வெளிநாட்டிலுள்ள மகள் சந்தேகம் தொிவித்த நிலையில் சடலத்தின் மீது நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் மாரடைப்பே மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது,

மீசாலை வடக்கை சேர்ந்த முன்னாள் கிராம சேவகரான 86 வயதுடைய முதியவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வெளிநாட்டிலுள்ள மகள் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது மாரடைப்பினாலேயே அவர் உயிரிழந்தார். என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

Leave a Reply