மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பேருந்து கட்டணம்!

<!–

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பேருந்து கட்டணம்! – Athavan News

நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளுக்கு விசேட மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

அவ்வாறு மானியம் வழங்கப்படாவிட்டால் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply