நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை அவசியமில்லையா?

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை.

இதனை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நடைமுறை மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.

இதுவரை இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

பரிசோதனையில் தொன்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவா்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொற்று உறுதி செய்யப்படுவோர் தமது சொந்த செலவில் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் மார்ச் -01 முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டுக்குள் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply