மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு, பெப்.27

மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் எனும் ஊடகவியலாளர் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான அவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வந்தாறுமூலை பிரதான வீதியில் அமைந்திருந்த பேருந்து தரிப்பிடம் ஒன்று இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேவபிரதீபன் கூறியதாவது,

தான் சுதந்திரமாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வந்து தன்னை தாக்கியதாகவும், இதனால் தலையின் பின்பக்கம், மற்றும் கையிலும், வலி ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தன்னைத் தாக்கியவர் கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரிபவர் என தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மிலேச்சத்தனமான சம்பவங்கள் தொடர்பில் ஊடக அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களும், கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply