இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு விபரங்களில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனின் செலவு விபரம் காட்சிப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்களின் செலவு விபரம் சகல மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தல் மேற்கொண்டுள்ள 35 வேட்பாளர்களின் கணக்கு விபரத்தில் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரனின் கணக்கு அறிக்கை எங்குமே காட்சிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் தேர்தல்கள் அலுவலகத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
“அரியநேத்திரன் உரிய காலப் பகுதயில் தனது கணக்கு அறிக்கையை உரிய முறையில் கையளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படுவதால் அவரது அறிக்கை காட்சிப்படுத்தப்படவில்லை.” – என்று பதிலளித்தனர்.