கடந்த ஐந்தாண்டுகளில், கிட்டத்தட்ட இரண்டாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இரண்டாயிரம் வைத்தியர்கள் முதல் சந்தர்ப்பத்திலேயே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததன் காரணமாகவும், இலங்கையில் பிரதான விசேட வைத்திய நிலையங்களை நடத்துவது ஏற்கனவே கடினமாகிவிட்டது.
மற்றும் போதுமான வைத்தியர்கள் இல்லை. பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
பல வைத்தியசாலைகளில் தற்போதுள்ள ஊழியர்கள் போதுமானதாக இல்லை எனவும், ஊழியர்களை அதிகரிப்பதற்கு திறைசேரி அனுமதி வழங்கத் தயங்குவதும் சுகாதார சேவைக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த அரசாங்கங்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய சம்பளம் வழங்காததன் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், சுகாதார சேவையில் நிலவும் சம்பள ஏற்றத்தாழ்வைத் தீர்க்க பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கொள்கைகளை உடனடியாக தயாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.