புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில் சிறுகன்றுகளின் தாய் மாடுகளினை, கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் இரண்டு தாய் மாட்டினையும் திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த கால் நடைவளர்ப்பு உரிமையாளரினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.