பலாங்கொடை பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று திடீர் ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (25) பிற்பகல் சுமார் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
கழிவறைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தை பயன்படுத்தியதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மாணவர்கள் ஒருவகையான இரசாயன திரவத்தைப் பயன்படுத்தி கழிப்பறைகளை சுத்தம் செய்ததாகவும் இதனால் மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பொலிஸார் கூறினர்.