அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகின்றது சு.க – உறுதிப்படுத்தினார் தயாசிறி

தேவையான நேரம் வரும் போது கட்சி மத்திய குழுவின் அனுமதியுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகி வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply