இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொரோனா திரிபு உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளிவிபர ரீதியாக கொரோனா தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக சுகாதார கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மிகவும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply