வடபகுதி மீனவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, பெப்.28

உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் வட பகுதி மீனவர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இழுவைமடி படகுகள் தடை செய்யப்படுமாக இருந்தால், அதனை நம்பியுள்ள மீனவக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அண்மைக்காலமாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக வடபகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் இழுவைமடி படகுகள் காரணமாக தங்களது கடல் வளம் சூறையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையிலேயே உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Leave a Reply