வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்கப்பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா மரக்கறிச் சந்தைப் பகுதியில் வைத்து கப் வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது.
குறித்த வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கானர் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யபட்டவர்கள் பியகமவை சேர்ந்த 4 பேரும், பிலியந்தலவை சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






