எரிபொருள் விலையேற்றத்தால் விவசாயிகளும் பாதிப்பு!

திருகோணமலை – தோப்பூர் பிரதேச விவசாயிகள் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு அறுவடை இயந்திரக்கூலி 6,500 ரூபாய் தொடக்கம் 7,000 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது எரிபொருளுக்கான விலை அதிகரித்தமையால் ஏக்கருக்கு 9,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் ஏக்கருக்கு சுமார் 30 மூடைகள் அறுவடை கிடைத்ததாகவும், இம்முறை யூரியா பசளை இல்லாமையால் விளைச்சல் குறைவடைந்து ஏக்கருக்கு 5 தொடக்கம் 10 மூடைகள் கிடைத்து வருவதால் தாம் பாதிப்புற்றுள்ள நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்தினால் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு எரிபொருள் விலையேற்றத்தை குறைப்பதற்கும், யூரியா பசளை வழங்குவதற்கும் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply