நாட்டில் திரிபோஷவும் இனி இல்லை!

சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சியசாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்பட மாட்டாது.

திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினந்தோறும் திரிபோஷா உற்பத்திக்கு சுமார் 70 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுகிறது. தேவையான அளவு மக்காச்சோளத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்த போதிலும், அதுவும் முடங்கியுள்ளது.

திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான பால் மாவைப் போதுமானளவு பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply