<!–
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று பகலில் இயக்கப்படவுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றிலிருந்து மேலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






