கச்சதீவு அந்தோனியார் பெருவிழா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்கான கச்சதீவு அந்தோனியார் பெருவிழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவாறு தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் பெருவிழா நடைபெறவுள்ளது. இதில் மதகுருமார் மற்றும் பக்தர்கள் உள்ளடங்கலாக, இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா 50 பேர் கலந்து கொள்ள முடியும்.

அத்துடன் தடுப்பூசி செலுத்திய அட்டை வைத்திருக்க வேண்டு, மேலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

ஆகவே இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகள் இடம்பெறும் என்றார். அதற்கான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.- என்றார்.

Leave a Reply