இராவண எல்ல நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளாா். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் எல்ல பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். பண்டாரவளை நீதவான் நீதிமன்ற மன்றத்தினால் நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்து வருகின்றனா்.






