
நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒழுக்க நெறிமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு கல்வியே முக்கிய காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே, பிள்ளைகள் முன்கூட்டியே பாடசாலையை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும், அதே நேரத்தில் படிப்பை முடிக்க செலவிடும் காலத்தையும் குறைக்க வேண்டும்.
3,30,000 பேர் முதலாம் வகுப்பிற்குச் சென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் பாடசாலைக் கல்வியை முடிக்க வேண்டும்.
கல்வி முறை பிள்ளைகளுக்கு சுமையாக உள்ளது மற்றும் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க பெற்றோர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர், பிள்ளைகள் வளரும்போது அவர்களும் அதையே செய்கிறார்கள்.
பொதுவாக ஒருவர் தனது வாழ்நாளில் 25 முதல் 28 வருடங்கள் வரை படிப்பதற்காக செலவிடுகிறார். எனவே படிப்பை முடிக்க செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும்.
ஒரு மாணவர் ஆகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்யும் போது, நான்கு மாதங்களுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் பெறுபேறுகள் வெளியாகும். பல்கலைக்கழக அனுமதிக்கு மேலும் ஒன்றரை வருடங்கள் ஆகும்.
லண்டன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும், எனினும் உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என அவர் தெரிவித்தார்.





