
மன்னார், பெப்.28
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி தமிழ் வீரரான டக்சன் புஸ்லாஸாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாயார் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதான டக்ஸன் பியுஸ்லஸ் மாலைத்தீவில் உயிரிழந்திருந்தார்.
மாலைதீவில் தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி கொண்டிருந்த போது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்கு பெருமை சேர்த்த எனது பிள்ளைக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மகனின் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது. தனது மகனின் மரணத்திற்கு உரிய நீதியினை பெற்றுத்தருமாறும் உயிரிழந்த டக்சனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.





