மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்: உக்ரைன் அதிபர்

உக்ரைன், பெப்.28

மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி , “உக்ரைன் மக்கம் மீது ரஷ்யா போரிட்டு வருவது இனப்படுகொலை. உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியது மிருகத்தனமான செயல். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா கூறியிருப்பது அப்பட்டமான பொய்” என கூறியுள்ளார்.

மேலும் அவர், “மின்நிலையங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்க்கான வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply