திட்டு வாங்கும் பேருந்து உரிமையாளர்கள்! நாள் ஒன்றுக்கு 330 லீற்றர் வேண்டும் – எங்கே போவது ?

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளிமாவட்ட பேருந்து சேவையில் ஈடுபடுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவையில் ஈடுபடும் உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகிறது.இதனால் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருளை பெற வேண்டும்.

இதனால் குறித்த நேரத்தில் எமது சேவையை செய்ய முடியாமல் போய் உள்ளது. எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது, இந்த நிலையில் நாம் முன்னர் பயணிகளிடம் இருந்து அறவிட்ட கட்டணத்தை அறவிட முடியாது.

ஆகவே ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.நாமும் லீசிங்க் போன்ற கடன் வசதிகளை பெற்றுள்ளோம்.அதற்கு பணம் வேண்டும்.

நாம் பேருந்து சேவையில் ஈடுபடா விடின் எவ்வாறு இந்த கடன்களை செலுத்த முடியும்.இனிய டீசல் இல்லை என்று தான் கூற வேண்டும்.

5 ஆயிரம் ரூபா என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே டீசல் கிடைக்கும். அதனை பயன்படுத்து யாழ்பாணத்திலிருந்து புத்தளம் ,நீர் கொழும்பு கூட தாண்ட முடியாது.

35 ஆயிரம் ரூபா பெறுமதியான 330 லீற்றர் டீசல் எமக்கு வேண்டும்.அப்போது தான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று வர முடியும்.

ஆகவே இதனை ஒரே தடவையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இப்போது பெற முடியாமல் உள்ளது.

பேருந்தை தள்ளிக்கொண்டு போவதற்கு கூட முடியாது இந்த நிலையில்.அடுத்த கட்டம் என்னவென்றே எமக்கு தெரியாது. இதே நிலைமை தான் லொறி சேவையில் ஈடுபடுவோரின் நிலைமையும் உள்ளது.

நாம் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலயமாக நின்று பேருந்துக்கு டீசல் நிரப்புகின்றோம். பேருந்தை புக் செய்த பயணிகள் வீதியில் நின்று கொண்டு ஏன் தாமதமாக வருகிறீர்கள் என்று எங்களை ஏசுகின்றனர்.

எரிபொருள் விலை ஏறினாலும் நாம் இப்போது யாழ் – கொழும்பு பேருந்து சேவைக்கு 1300 ரூபா தான் கட்டனமாக வாங்குகின்றோம்.

ஆனால் 28 ஆயிரம் ரூபாவுக்கு முன்னர் வாங்கி டீசல்,இப்போது 35 ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறது. இனி 50 ஆயிரம் ரூபாவுக்கும் டீசலின் விலை செல்லும் என்றார்.

Leave a Reply