மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் விஞ்ஞான வினா போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி வருடாந்தம் நடாத்தும் தரம் 8 மாணவர்களுக்குரிய விஞ்ஞான வினா போட்டியின் 2020 ஆம் ஆண்டிற்குரிய போட்டியில் வட மாகாண ரீதியில் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்களில் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நாலாவது ஐந்தாவது இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் S.E.றெஜினோல்ட் (FSC) வழிநடத்தலின் கீழ் இரு மாணவர்களும் விஞ்ஞான வினா போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குபேர குமார் அபிஷேக் நாங்காம் இடத்தையும், ரமணா குமார் சயூதன் ஐந்தாம் இடங்களை பெற்று கொண்டனர்.
குறித்த இரு மாணவர்களுக்குமான பரிசளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு தலா 15000 ரூபாய் பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.








