சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளை சந்திக்கின்றார் பஷில்!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில், அவற்றின் வருடாந்த கூட்டத்தொடரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே நிதி அமைச்சர், குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply