கரடிப்போக்குப் பகுதியில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிபோக்கு பகுதியில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 5 மீற்றர் தொலைவில் கால்வாயில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயரிழப்பானது விபத்தால் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதற்கான தடயங்கள் வீதியில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply