இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளுக்கு செல்லும் மத்திய அமைச்சர்கள்!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்லவுள்ளனர்.

உக்ரைனின் கீவ்,  கார்கிவ் நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்து உயர்மட்டக் குழுகூட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் கலந்தகொண்டனர்.  இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி  மத்திய அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கும்,  மத்திய அமைச்சர்  கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவுக்கும்,  மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கும், மத்திய இணை அமைச்சர்  வி.கே.சிங் போலந்துக்கும் செல்லவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply