எரிபொருள் விற்பனை நிலையங்களில் டீசல் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

வவுனியா மாவட்டத்திலுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எரிபொருள் (பெற்றோல் மற்றும் டீசல்) இன்மை காரணமாக நகரிலுள்ள சில எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய எரிபொருள் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு காரணமாக காலை வேளையில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

அத்துடன் சில எரிபொருள் நிலையத்தில் டீசல் இல்லை என பாதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக முண்டியடித்து, வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதால் சில எண்ணை நிரப்பு நிலையங்கள் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளன.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் டீசல் எண்ணெய்யை தேடி, ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கிச் சென்று வருவதாகவும், இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருப்பதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply