தற்பெருமையான வசனங்களுக்கு ஏமாறாதிருப்போம்! – சஜித்

அரசியல் நோக்கங்களுக்காகவே காலகாலமாக இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்நிலை முற்றாக மாற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இளைஞர் சக்தி மற்றும் ஐசுஐ சர்வதேச நிறுவகத்துடன் இனைந்து ஏற்ப்பாடு செய்த மூன்று நாள் வதிவிட பயிற்சித் திட்டம் காலியில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவநம்பிக்கையிலிருந்து, நம்பிக்கையை நோக்கி நகரும் செயல்பாட்டில் வெற்றிகரமான மற்றும் நடைமுறை பங்காளிகளாக இளைஞர்களே மாற வேண்டும்

நாட்டை கட்டியெழுப்ப புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக கூறும் பலர், புதியவர்கள் அல்லர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி பாரம்பரிய எதிர்க்கட்சி என்ற வகிபாகத்திற்கு அப்பால் சென்று நடைமுறை ரீதியான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாறி எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்கும் சக்தியாக நாம் மாற வேண்டும் என்றார்.

Leave a Reply