
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் அரைவாசி பெற்றோர் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் 30 கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை முடிந்தளவு விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு சிறுவர்களின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்டத் தடுப்பூசியை முறையாகப் பெற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களினூடாக சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவலடையும் நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோர்கள் ஒரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
முதலாவது தடுப்பூசி அல்லது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத பெற்றோரிடம் காரணங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மூன்று விடுதிகளில் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

