
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11ஆம், 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
தற்போதுள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 100 பேர் மாத்திரமே கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு அனுமதிப்பது என வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்டச்செயலர் தலைமையில் கடற்படையின் உயரதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பிரதேச சபை செயலர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோருடன் இடம்பெற்றது.





