வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி வவுனியாவின் பல்வேறு இடங்களில் கையெழுத்துப் போராட்டம் தமிழரசுக்கட்சியால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் காலை 8.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்திலும் பின்னர் இலுப்பையடி, செட்டிகுளம் உட்பட நகரின் சில பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், வாலிபர் முண்ணனித் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply