ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்பம்

பெலாரஸ், பெப்.28 

ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பு, விருப்பம், ஆசை. போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு, சமரச பேச்சுவார்த்தைக்குத்தான் உண்டு.

போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா இணங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷ்யாவை இறங்கி வரச்செய்துள்ளது.

பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டு குழுவினரும் பெலாரஸ் வருகை தந்தனர். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன. உக்ரைன் மீது 5-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று போர் முடிவுக்கு வருமா? என உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளன.

Leave a Reply