
தலவாக்கலை, பெப்.28
தலவாக்கலையில் ஆசிரியரின் உயிரிழப்புக்கு நீதி கோரி, நுவரெலியா -ஹட்டன் பிரதான வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம், தலவாக்கலை லோகி வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், லோகி தோட்ட மக்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டதில் 100 ற்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டு, ஆசிரியரின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த (21) திகதி மாலை 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





