
நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே பிரச்சனைகள் அதிகரித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, எண்ணெய் விலை உயர்வு, நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல், மக்களிற்கு உண்மையில் இன்று பிரச்சனை அதிகரித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது பிரச்சனை தீர்வு காண்போம் அவ்வாறு கூறியவர்கள் இன்று மக்களின் பிரச்சினை குறித்து பேச ஒருவர்கூட இல்லை.
விவசாய அமைச்சர், பொருளாதார அமைச்சர் என அனைவரும் தமது விடயங்கள் குறித்து மாத்திரமே பேசுகின்றனர்.
எரிசக்தி அமைச்சர் கூறுவது, அங்கு எரிபொருள் விலை அதிகரிக்கமாறும்,
நிதி அமைச்சர் ஒரு மூலையில் அல்ல 7மூலையின் சிந்தனையில் செயற்படுகிறார் என்றும் கூறுகின்றனர்.
இவ் அரசாங்கம் தமது துறை குறித்து மாத்திரமே பேசுகின்றனரே தவிர மக்களின் பிரச்சினை குறித்து யாரும் இங்கு பேசுவது இல்லை.
தயவு செய்து அரசாங்கமே மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வுகளை வழங்க வேண்டும்.
மக்களுக்கு மின்சாரம் இல்லை, விளக்கிற்கு எண்ணெய் இல்லை, இருளில் இருக்க வேண்டி உள்ளது.
அதே போல விவசாயிகளிற்கு உரம் பெறுவதை தடுத்தது இவ் அரசாங்கம்.
இவ்வாறு டொலர் பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சினைகளிற்கு காரணம் இவ் அரசாங்கமே.
எனவே இந் நாட்டில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சிக்கு எதிராக, நாட்டின் பொருளாதார பிரச்சனை தீர்வு குறித்து வருகின்றன.
29ஆம் திகதி சலல்காதுபிடியில் கூட்டம் நடாத்த உள்ளோம் எங்களுடன் கைகோருங்கள் என்று கூறியுள்ளார்.





