“உக்ரையன் போர்க்களம் 6வது நாள்” ரஸ்ய படைகளின் தாக்குதல் ஆரம்பம்! 

“உக்ரையன் போர்க் களம் 6வது நாள்” ரஸ்ய படைகளின் தாக்குதல் ஆரம்பம்!உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஸ்ய ராணுவம் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் “கியேவைச் சுற்றியுள்ள சூழ்நிலை தொடர்ந்து பதற்றமாக உள்ளது” என்று உக்ரைய்ன் இராணுவம் எச்சரித்துள்ளது.

“எதிரி தாக்குதல் திறனை இழந்தாலும், இராணுவம் மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீது அவர் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூடு நடத்துகிறான்” என்று உக்ரைய்ன் இராணுவம் தெரிவித்துள்ளது.ரஸ்யா “பெலாரஸ் குடியரசின் உயர் பயிற்சி பெற்ற இராணுவப் பிரிவுகளுடன் சேர திட்டமிட்டுள்ளது” என்றும், பெலாரஸின் வான்வெளியை அதன் இராணுவ விமானப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தவும் ரஸ்யா திட்டமிட்டுள்ளது என்றும் உக்ரைய்ன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன்-கெர்சனில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு!உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சனில்( Kherson) சக்திவாய்ந்த வெடிகுண்டு சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமான நிலையத்திற்கு அருகில் இருந்து இந்த சத்தம் வந்ததாக நம்பப்படுகிறது.

கெர்சன் கிரிமியன் தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும்.

ஏற்கனவே இந்த நகரத்தை தமது படைகள் முழுமையாக சுற்றிவளைத்;துள்ளதாக ரஸ்யா அறிவித்திருந்தது.

(போர் ஆரம்பிக்கும் முன்னர் கெர்சன் நகருக்கு ஜனாதிபதி சென்றிருந்தார்)

உக்ரைய்னில் ரஸ்ய தொலைபேசி எண்கள் துண்டிப்பு! ரஸ்ய எண்களைக் கொண்ட தொலைபேசிகள் இனி உக்ரேனிய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பைப் பயன்படுத்த முடியாது என்று உக்ரைனின் அரச சிறப்புத் தொடர்புச் சேவை அறிவித்துள்ளது.ரஸ்ய ஆக்கிரமிப்புப் படைகள், உக்ரைய்ன் குடிமக்களிடமிருந்து தொலைபேசிகளை அதிகளவில் எடுத்துச் செல்கின்றன” என்று உக்ரைன் அரச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே ரஸ்ய தொடர்பு எண்களை உக்ரைய்னிய தொலைதொடர்பு நிறுவனங்கள் துண்டித்து வருகின்றன.

இந்தநிலையில் ரஸ்ய துருப்புக்களால் தங்கள் தொலைபேசிகளை இழந்த உக்ரேனியர்கள், தமது எண்களில் இருந்து ரஸ்யாவுக்கு தொடர்புகொள்வதை தடுப்பதற்காக தொலைபேசி இயக்குநர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

உக்ரைய்னுக்குள் சென்றுள்ள 75 வீத ரஸ்ய படையினர்உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஸ்ய படைகளில் சுமார் 75வீதமானோர் இப்போது உக்ரைய்னுக்குள் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறுகிறது.ரஸ்ய துருப்புக்களின் முக்கிய முன்னேற்றம் இப்போது தலைநகர் கீவில் இருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

ரஸ்ய படையினர் இன்னும் வடகிழக்கில் கார்கிவ் மற்றும் தெற்கில் மரியுபோல் ஆகிய இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றவில்லை.உக்ரைய்னியர்களின் கடும் போராட்டம் காரணமாக, ரஸ்ய துருப்புக்களால் அவர்கள் திட்டமிட்ட முன்னேற்றத்தை அடைய முடியவில்லை.இதேவேளை ரஸ்ய ஜனாதிபதி புடினின் அணுவாயு அறிவிப்பு தொடர்பில் எந்த நகர்வுகளையும் தாம் காணவில்லை என்றும் பெலாரஸ் படைகள், ரஸ்ய படைகளுக்கு உதவும் செயற்பாடுகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.கீவ் தலைநகரை நோக்கி ரஸ்யாவின் பாரிய எண்ணிக்கையிலான கனரக வாகனங்களின் படையினர் செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 40 மைல் தொலைவுக்கு இந்த வாகன தொரடரணி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய 12 ரஸ்ய அதிகாரிகளை அமெரிக்கா நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.

போல்டிக் கடல் பகுதிக்கு ஜெர்மனி போர் விமானங்களை அனுப்பும் ஜெர்மனிபோல்டிக் கடல் பகுதிக்கு உளவுப் பணிக்காக ஜெர்மனி டொர்னாடோ போர் விமானங்களையும் கடல் ரோந்து விமானத்தையும் அனுப்புவதாக ஜெர்மனியின் நேட்டோ பணியகம் தெரிவித்துள்ளது.பெர்லினில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களால் உடனடியாக எந்த விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஜெர்மன் கடற்படை ஆறு கூடுதல் போர்க்கப்பல்களை சேவைகளுக்கு அனுப்பியுள்ளது. இதில் நான்கு கப்பல்கள் போல்டிக் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ரஸ்யாவுக்கு எதிராக போராட்ட உக்ரைய்ன் வருவோருக்கு வீசா அவசியம் இல்லை ரஸ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இன்று மார்ச் 1 முதல் விசா இல்லாத பயணம் அனுமதிக்கப்படும், என்று உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.இந்தநிலையில் ரஸ்ய படையினர் திங்களன்று கார்கிவில் “போர்க்குற்றம்” செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், கார்கிவில் ரஸ்ய படையினர் பொதுமக்களை திட்டமிட்டு அழித்தமையை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

(ஆயுதத்துடன் உக்ரையன் வீதியில் நிற்கும் உக்ரையன் பொதுமகன்)“அமைதியான உக்ரேனியர்களைக் கொன்றதற்காக உலகில் யாரும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார் “எதிரிகளுக்கு, கெய்வ் ஒரு நகரமே முக்கிய குறிக்கோள்” என்றும் அவர் குறிப்பிட்டார் “அவர்கள் மின் உற்பத்தி நிலையத்தை மூடிவிட்டு அந்த நகரத்துக்கு மின்சாரம் இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள்” எனினும் தலைநகரின் பாதுகாப்பை உடைக்க உக்ரைய்னிய படையினர் அவர்களை அனுமதிக்கவில்லை. என்றும் ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்க்களத்தில் ரஸ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் (thermobaric) ஆயுதத்தைப் பயன்படுத்தியது என்று அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார்.இது, ஜெனீவா மாநாட்டால் தடைசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் மாநாட்டில் இருந்து வெளிவந்த பின்னர் அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.தெர்மோபரிக் ஆயுதங்களை வழக்கமான வெடிமருந்துகளாக பயன்படுத்துவதில்லை.

தெர்மோபரிக் ஆயுதங்கள், உயர் அழுத்த வெடிபொருளால் நிரப்பப்பட்டு, சுற்றியுள்ள சூழலில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் அழுத்த அலையை உருவாக்குகின்றன.மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்படி, ரஸ்ய குடியரசின் செச்சினியாவில் அவற்றின் பயன்பாடு இதற்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தது.இந்தநிலையில் கடந்த சனிக்கிழமையன்று, ரஸ்ய நகரமான பெல்கோரோட் அருகே தெர்மோபரிக் உந்துனையை பார்த்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply